உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் தேரோட்டம்!

வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் தேரோட்டம்!

தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் தேரோட்டம் தொடங்கியது. வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் விழா கடந்த ஏப்ரல் 21 கம்பம் கொண்டுவருதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. மே 12 செவ்வாய்க்கிழமை விழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் தொடங்கின. அன்று அம்மன் மலர் விமானத்தில் ஊருக்குள் இருந்து திருக்கோயிலுக்கு வந்தார். மே 13 முத்துப்பல்லக்கில் அம்மன் பவனி வந்தார். மே 14 புஷ்பபல்லக்கில் பவனி வந்தார். நேற்று மாலை தேரோட்டம் தொடங்கியது. கலெக்டர் வெங்கடாச்சலம் தொடங்கி வைத்தார். ரூராட்சி தலைவர் ரத்தினசபாபதி, பேரூராட்சி செயல்அலுவலர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள், பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். தேர் நான்கு ரதவீதிகளிலும் நிறுத்தப்பட்டு அம்மனுக்கு பூஜைகள் நடைபெறும் மே 18 தேர் நிலைக்கு வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !