சிறை மீட்டி ஐயனார் கோவிலில் புரவி எடுப்பு!
ADDED :3800 days ago
சிங்கம்புணரி : முறையூரில் ஐந்தாண்டுக்கு பிறகு சிறை மீட்டி ஐயனார் கோயில் புரவி எடுப்புவிழா நடந்தது. கிராமத்தின் சார்பில் 15 நாட்களுக்கு முன் புரவிகள் செய்ய பிடிமண் கொடுக்கப்பட்டது. அரண்மனை குதிரைகள்,நேர்த்தி குதிரைகள்,யானைகள் செய்து வண்ணம் தீட்டப்பட்டது. முதல் நாள் சூளை பொட்டலிலிருந்து புரவிகள் பொட்டலுக்கு கொண்டு வரப்பட்டன. மறுநாள் சாமியாட்டத்துடன் சிறை மீட்டி ஐயனார் கோயிலுக்கு ஒரு அரண்மனை புரவி, மகாசாத்தய்யனார் கோயிலுக்கு 2 அரண்மனை புரவி, நேர்த்தி புரவிகளை கிராம மக்கள் கொண்டு சென்றனர்.