உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநள்ளார் சனீஸ்வரர் பிரம்மோற்சவம்: தேரோட்டத்திற்கு தயாராகும் தேர்கள்!

திருநள்ளார் சனீஸ்வரர் பிரம்மோற்சவம்: தேரோட்டத்திற்கு தயாராகும் தேர்கள்!

காரைக்கால்: திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவில் பிரம்மோற்சவ விழாவில், வரும் 29ம் தேதி தேர் திருவிழாவையொட்டி, 5 தேர்களை தயார் செய்யும் பணி நடந்து வருகிறது. காரைக்கால் திருநள்ளா ரில் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். இக்கோவிலின் பிரமோற்சவ விழா, கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 22ம் தேதி இரவு அடியார் நால்வர் உற்சவம், 27ம் தேதி அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடத்தி, புஷ்ப பல்லக்கில் வீதியுலா, தங்க ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா, 29ம் தேதி காலை 7.00 மணிக்கு செண்பக தியாகராஜர் தேரில் எழுந்தருள தேர் திருவிழா நடக்கிறது. இதையொட்டி, 5 தேர் கள் தயார்படுத்தும் பணி துவங்கியது. இதற்காக, தேரை சுற்றி அமைத்திருந்த ஷெட் அகற்றப்பட்டு, தேரில் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தும் பணி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !