உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொன்மாரியம்மன் கோவில் விழா; வரும் 29ம் தேதி கும்பாபிஷேகம்

பொன்மாரியம்மன் கோவில் விழா; வரும் 29ம் தேதி கும்பாபிஷேகம்

கோபி : கோபி அருகே, 300 ஆண்டு பழமை வாய்ந்த ஐயம் தீர்க்கும் விநாயகர் மற்றும் பொன்மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகப் பெருவிழா, வரும், 29ம் தேதி நடக்கிறது. கோபி அருகே உள்ள நம்பியூர் பொலவபாளையம் புது அய்யம்பாளையத்தில், 300 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட ஐயம் தீர்க்கும் விநாயகர் மற்றும் பொன்மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், பல லட்சம் மதிப்பில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது.வரும், 25ம் தேதி கணபதி ஹோமத்துடன், கும்பாபிஷேக பூஜை துவங்குகிறது. 27ம் தேதி முதற்கால வேள்வியும், மூலமந்திர ஹோமம், 28ம் தேதி இரண்டாம் கால யாக பூஜை, மாலை மூன்றாம் காலயாக பூஜை, 29ம் தேதி நான்காம் கால பூஜை, உதயகிரி முருகபெருமான் கோவில் அர்ச்சகர் பழனிசாமி சிவாச்சாரியார் தலைமையில் நடக்கிறது.தொடர்ந்து, காலை, 8 மணிக்கு ஐயம் தீர்க்கும் விநாயகர் கோவில், மாரியம்மன் கோவில் மற்றும் நவகிரக தெய்வங்களுக்கு, பல்வேறு புண்ணிய நதி தீர்த்தங்களுடன், வேத மந்திரங்கள் முழங்க, மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. ஊதயகிரி முருகன் கோவில் அர்ச்சகர் குமாரஞான சம்பந்தசிவம், மகா கும்பாபிஷேகத்தை நடத்துகிறார். தீபாராதனைக்கு பின், பக்தர்களுக்கு அன்னதானம் நடக்கிறது.ஏற்பாடுகளை, திருப்பணி கமிட்டித்தலைவர் புது அய்யம்பாளையம் பொன்னுசாமி தலைமையில் சபேதர்கவுண்டர், மகாலிங்கம், சண்முகம், கோவிந்தராஜ், மூர்த்தி, சுப்பிரமணியம், வெங்கடாசலம், பழனியம்மாள், சண்முகம் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !