உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லெஷ்மிநாராயண ஸ்வாமி கோவிலில் விளக்கு பூஜை

லெஷ்மிநாராயண ஸ்வாமி கோவிலில் விளக்கு பூஜை

கரூர்: அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலையானதை தொடர்ந்து கரூர்- கோயம்புத்தூர் சாலையில் உள்ள லெஷ்மிநாராயண ஸ்வாமி கோவிலில், 108 திரு விளக்கு பூஜை நடந்தது. இதில், அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் கட்சி தொண்டர்கள் பங்கேற்றனர். திருவிளக்கு பூஜையை முன்னிட்டு, கோவிலில், லெஷ்மிநாராயண ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாட்டில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், மாவட்ட துணைத் தலைவர் காளியப்பன், மாவட்ட பொருளாளர் முரளி, நகர்மன்ற தலைவர் செல்வராஜ், கரூர் அ.தி.மு.க., நகர செயலாளர் நெடுஞ்செழியன் மற்றும் அ.தி.மு.க.,வினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !