உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரத்தில் ராமலிங்க பிரதிஷ்டை!

ராமேஸ்வரத்தில் ராமலிங்க பிரதிஷ்டை!

ராமேஸ்வரம்: ராமலிங்க பிரதிஷ்டை விழா, ராமேஸ்வரம், ராமநாத சுவாமி கோவிலில், வரும் 2?ம் தேதி நடக்கிறது. கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது: ராமேஸ்வரம் கோவில் வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில், ஆண்டுதோறும் ராமலிங்க பிரதிஷ்டை விழா நடக்கிறது. வரும் 26ம் தேதி மாலை, ராமர் பல்லக்கில் எழுந்தருளி, ராவண சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. மறுநாள், தனுஷ்கோடி அருகே, கோதண்ட ராமர் கோவிலில், வீபீஷணருக்கு பட்டாபிஷேகம் சூட்ட, கோதண்ட ராமர் கோவிலுக்கு ராமர் வருவார். அன்று அதிகாலை, 3:00 மணிக்கு ராமேஸ்வரம் கோவில் நடை திறந்து, 4:00 மணிக்கு ஸ்படிகலிங்க பூஜை நடக்கும்; காலை 7:00 மணிக்கு, கோவில் நடை சாத்தப்படும். மாலை 4:00 மணிக்கு, கோவிலுக்கு ராமர் திரும்பியதும் நடை திறக்கப்படும். வரும் 28ம் தேதி, ராமலிங்க பிரதிஷ்டை விழா நடக்கும். இவ்வாறு, கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !