உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழா

மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழா

லாலாபேட்டை: லாலாபேட்டை அருகே, சிந்தலவாடி மகா மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட சிந்தலவாடியில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. பழமையான இந்தக் கோவிலில், கடந்த வாரம் பூச்சொரிதல் விழா நடந்தது. நேற்று காலை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். மதியம், 12.15 மணியளவில் அலங்காரம் செய்யப்பட்ட மாரியம்மன் திருத்தேர் வலம் வந்தார்.தேரோட்டத்தில், லாலாபேட்டை சுற்றியுள்ள கிராமங்களான சிந்தலவாடி, கருப்பத்தூர், கள்ளப்பள்ளி, மகிளிப்பட்டி, புனவாசிப்பட்டி, வல்லம், கொப்பம்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் பங்கேற்றனர். பொதுமக்கள் சார்பில், அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை லாலாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் கோவில் விழாக்குழுவினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !