உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரபத்திரசாமி திருவீதி உலா

வீரபத்திரசாமி திருவீதி உலா

ஓசூர்: ஓசூர் அடுத்த, அஞ்செட்டி அருகே, வீரபத்திரசாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது. அஞ்செட்டி அருகே உள்ள, தேவன்தொட்டி கிராமத்தில், பழமையான வீரபத்திரசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில், நேற்று அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மேலும், வீரபத்திரசாமி உற்சவ மூர்த்தி, பூக்களால் அலங்கரிப்பட்டு, திருவீதி உலா நடந்தது. இதை தொடர்ந்து, ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில், பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !