வல்லமடை உலக ரட்சகர் தேர்பவனி
ADDED :3800 days ago
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள வல்லமடை உலகரட்சகர் ஆலய விண்ணேற்பு விழா மே 8ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நாளான நேற்று முன்தினம் இரவு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் உலகரட்சகர் வீதி உலா வந்தார். கொடியிறக்கத்துடன் விழா நேற்று நிறைவுற்றது. வல்லமடை உட்பட சுற்றுப்புற கிராமத்தினர் திரளாக கலந்துகொண்டனர்.