உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீவனூர் பெருமாள் கோவிலில் 25ம் தேதி பிரம்மோற்சவம்

தீவனூர் பெருமாள் கோவிலில் 25ம் தேதி பிரம்மோற்சவம்

திண்டிவனம்: தீவனூர் பெருமாள் கோவிலில், வரும் 25ம் தேதி பிரம்மோற்சவம் துவங்குகிறது. திண்டிவனம் அடுத்த தீவனூரில், ஆதிநாராயண பெருமாள் என்கிற லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலின் வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் 25ம் தேதி காலை 6:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழாவை தொடர்ந்து வரும் 31ம் தேதி சுவாமிக்கு திருக்கல்யாணமும், அடுத்த மாதம் 2ம் தேதி பிரம்மோற்சவ தேரோட்டமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா முனுசாமி செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !