உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாதுகையைப் பூஜிக்கும் பாக்கியசாலி!

பாதுகையைப் பூஜிக்கும் பாக்கியசாலி!

ராமனைப் பிரிந்த தசரதரின் உயிர் பிரிந்தது. அயோத்தி மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.மக்களின் துன்பம் தீர்க்க, காட்டுக்குச் சென்ற ராமர் மீண்டும் நாடு திரும்ப வேண்டும் என பரதன் வேண்டினான். ஆனால், தந்தையின் வாக்கைக்காப்பாற்றியாக வேண்டும் என ராமர் மறுத்தார். தந்தை சொல் காத்த தனயனாக ராமனும், அவருக்கு உதவி புரிய லட்சுமணனும், தந்தைக்கு ஈமச்சடங்கு செய்ய சத்ருக்கனனும் இருக்கிறார்கள். கைகேயி வயிற்றில் பிறந்ததால் நான் மட்டும் இப்படி பாவியாகி விட்டேனே! என்று பரதன் அழுதான். எனவே, ராமரின் பாதுகையை அரசபீடத்தில் வைத்து, அவரது பிரதிநிதியாக இருந்து ஆட்சி செய்ய முடிவெடுத்தான். 14 ஆண்டுகள் அந்தப் பாதுகையைப் பூஜிக்கும் பாக்கியசாலி ஆனான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !