உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லட்டு டோக்கன் பார்கோடிங் முறை திருப்பதியில் தற்காலிக நிறுத்தம்!

லட்டு டோக்கன் பார்கோடிங் முறை திருப்பதியில் தற்காலிக நிறுத்தம்!

திருப்பதி,: லட்டு டோக்கனில், பார்கோடிங் அச்சிடும் முறையை, தேவஸ்தானம் தற்காலிகமாக நிறுத்தி உள்ளது.ஆந்திர மாநிலம், திருமலையில், பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு, மானிய விலையில் லட்டு டோக்கன் வழங்கப்படுகிறது. டோக்கனில் போலியைத் தவிர்க்க, பார்கோடு அச்சிடும் பணியை மேற்கொள்ள, தேவஸ்தானம் முடிவு செய்தது. நேற்று முன்தினம், இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட இருந்த நிலையில், பாதயாத்திரை வழியில், போலி டோக்கன்களை வினியோகித்துக் கொண்டிருந்தவர்களை, தேவஸ்தான விஜிெலன்ஸ் அதிகாரிகள் கைது செய்து விசாரித்தனர்.அவர்கள், கம்ப்யூட்டர் பழுது எனக் கூறி, பார் கோடு முறையை அமல்படுத்தவில்லை என்பது தெரிந்தது. அவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !