பொருள் தெரிந்து பாடுங்க!
ADDED :3967 days ago
மாணிக்கவாசகர் பாடிய திருவாசகத்தில் சிறப்பு மிக்கது சிவபுராணம். பக்தர்களால் அதிகம் பாடப்படும் பாடல் இது. இதன் முடிவில் சிவபுராணத்தைப் படிப்பதால் உண்டாகும் பயனை, “சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து’ என குறிப்பிட்டுள்ளார். அதனால், சிவபுராணத்தைச் சொல்பவர்கள் அதன் அர்த்தம் தெரிந்து பாடுவது அவசியம். இதில் சிவலோகத்தை மாணிக்கவாசகர் ‘சிவபுரம்’ எனக் குறிப்பிடுகிறார்.