உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்குடி கொப்புடையம்மன் கோயிலில் தேரோட்டம்!

காரைக்குடி கொப்புடையம்மன் கோயிலில் தேரோட்டம்!

காரைக்குடி: காரைக்குடி கொப்புடையம்மன் கோயில் தேரோட்டம் நேற்று நடந்தது. காரைக்குடி காவல் தெய்வமாக வீற்றிருக்கும் கிராம தேவதையான கொப்புடையம்மன் கோயில் செவ்வாய் திருவிழா 12ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. நாள்தோறும் காலை வெள்ளி கேடயத்தில்  அம்பாள் புறப்பாடு, பக்தி உலா,இரவு 8.30 மணிக்கு தீபாராதனை நடந்தது. அம்பாள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் இரவு வீதி  உலா வந்தார்.முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. காலை 11 மணிக்கு, அம்பாள் தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. மாலை 5  மணிக்கு தேர் வடம் பிடித்தல், காட்டம்மன் கோயிலுக்கு அம்பாள் எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. காட்டம்மன் கோயிலுக்கு சென்ற தேர், இன்று  கொப்புடையம்மன் கோயிலுக்கு திரும்பும் நிகழ்ச்சி நடக்கிறது. உற்சவரே மூலவராக இருப்பதால், கொப்புடையம்மன் கோயிலில் அம்பாள் காட்டம்மன் கோயிலுக்கு சென்று திரும்பும் வரை, கோயிலின் கருவறையில் ஸ்ரீசக்கர பலி பீடம் மட்டுமே இருக்கும். நாளை காலை யானை  வாகனத்தில் அம்பாள் வீதி உலாவும், மஞ்சள் நீராட்டும், இரவு 11 மணிக்கு தெப்ப தெருவிழாவும் நடக்கிறது. ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்வராஜ், உதவி ஆணையர் ரோஜாலி சுமதா, செயல் அலுவலர் செல்வி செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !