அவலூர்பேட்டையில் சாகை வார்த்தல் விழா
ADDED :4131 days ago
அவலூர்பேட்டை: அவலூர்பேட்டை மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நடந்தது. மேல்மலையனூர் ஒன்றியம், அவலூர்பேட்டை கடைவீதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா, கடந்த 12 ம்தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு நேற்று காலையில் பக்தர்கள் பூங்கரகம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சந்தன காப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. பிற்பகலில் கோவில் வளாகத்தில் சாகை வார்த்தல் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் இரவு அம்மன் வீதி உலா நடந்தது. இதில் மாரியம்மன் கோவில் நல அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.