அத்தனுார் அம்மன் கும்பாபிஷேக விழா துவக்கம்
பெ.நா.பாளையம் : அத்தனுார் அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இம்மாதம், 22ம் தேதி நடக்கிறது. பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், சோமையம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட காளப்பநாயக்கன்பாளையத்தில், அத்தனுார் அம்மன் கோவில் விரிவாக்கம் செய்யப்பட்டு, மூன்று நிலை ராஜகோபுரம் எழுப்பப்பட்டுள்ளது. பழமையான இக்கோவில் கும்பாபிஷேக சிறப்பு நிகழ்ச்சிகள் இன்று துவங்குகின்றன.இன்று காலை, 6:00 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, மூத்த பிள்ளையார் வழிபாடு, மாலை, 4:00 மணிக்கு முளைப்பாலிகை வழிபாடு, தீர்த்தக் குட ஊர்வலம் நடக்கிறது. நாளை துணை கோவில்களில் சிறப்பு வழிபாடு, மூலமூர்த்திகளை ஆதார பீடத்தில் வைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது.வரும், 22ம்தேதி காலை, 6:00 மணிக்கு திருக்குடங்கள் கோயிலை வலம் வருதல், ராஜகோபுரம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. பேரூராதினம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார், இளைய பட்டம் மருதாசல அடிகளார், குமரகுருபர சுவாமிகள், முத்துசிவராமசாமி அடிகளார், பொன்மாணிக்கவாசக அடிகளார் கலந்து கொள்கின்றனர்.