வீரமகாளியம்மன் கோவிலில் கிடா வெட்டி சிறப்பு பூஜை
ADDED :3795 days ago
கந்தர்வகோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகேயுள்ள பெரம்பூர் வீரமகாளியம்மன் கோவில் திருவிழாவில், கிடா வெட்டி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, பக்தர்கள் அம்மனுக்கு பால் காவடி, தொட்டில் காவடி, மயில் காவடி, அலகு குத்துதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்தி கடன்களை செய்தனர். நேற்று முன்தினம் இரவு அலங்கரிக்கப்பட்ட தேரில், அம்மன் திருவீதி உல நடந்தது. கோவில் முன், அதிகாலையில், நூற்றுக்கும் மேற்ப்பட்ட ஆடுகள் அம்மனுக்கு பக்தர்களால் பலியிடப்பட்டது. கந்தர்வகோட்டை, மருங்கூரணி, கொல்லம்பட்டி, ஆதனக்கோட்டை, வாரப்பூர், துவார், குப்பையன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலிருந்து பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். திருவிழாவை முன்னிட்டு கந்தர்வகோட்டை, செங்கிப்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.