12 குபேரன்கள்!
ADDED :3956 days ago
திருச்சி துறையூரிலிருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ளது செட்டிக்குளம். இங்குள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் கல்தூண்கள், கோபுர முகப்பு, தேவகோட்டம் என 12 இடங்களில் குபேரன் சிற்ப வடிவில் காட்சி தருகிறார். தீபாவளித் தினத்தன்று இங்கு நடைபெறும் குபேர ஹோமத்தில் கலந்து கொண்டால் செல்வ வளம் பெருகும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.