உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெயிலுகந்தம்மன் கோயில் விழா கொடியேற்றத்துடன் துவக்கம்!

வெயிலுகந்தம்மன் கோயில் விழா கொடியேற்றத்துடன் துவக்கம்!

விருதுநகர்: விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன் தினம் மாலை பராசக்தி அம்மன் கோயிலில் பொங்கல் சார்த்துதல், கும்ப யாக சாலை பூஜைகள் நடந்தது. இரவு எட்டு மணிக்கு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து பராசக்தி அம்மன், வெயிலுகந்தம்மனம் வெள்ளி சப்பரத்தில் பவனி வருதல் நடந்தது. இரண்டாம் நாளான நேற்று அம்மன் பல்லக்கில் எழுந்தருளலும் நடந்தது. இரவு அம்மன் வீதியுலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மே 27ல்அக்னி சட்டி எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !