பாஞ்சாலி அம்மன் கோவிலில் அக்னி வசந்த உற்சவம்!
ADDED :4127 days ago
அவலூர்பேட்டை: பரையம்பட்டில் அக்னி வசந்த விழா நடந்தது. அவலூர்பேட்டை அடுத்த பரையம்பட்டு கிராமத்தில் பாஞ்சாலி அம்மன் கோவி லில் அக்னி வசந்த விழா, கடந்த 3ம் தேதி துவங்கியது. தொடர்ந்து 13 ம் தேதி இரவு அம்மன் திருக்கல்யாணமும், தினசரி பிற்பகலில் ஆன்மிக சொற்பொழிவும், இரவு நாடகமும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலையில் துரியோதனன் படுகளமும், மாலையில் தீ மிதித்த லும் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் அமாவாசை , ஒன்றிய கவுன்சிலர் மதிவாணன் மற்றும் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.