உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திம்மனூர் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

திம்மனூர் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

அன்னுார் : திம்மனுார் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. திம்மனுாரிலுள்ள பழமையான விநாயகர் கோவிலில் பல திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, கும்பாபிஷேக விழா, 21ம் தேதி மாலை, விநாயகர் வழிபாடுடன் துவங்குகிறது. இரவு யாக வேள்வி பூஜை, எண் வகை மருந்து சாத்துதல் நடக்கிறது. 22ம் தேதி அதிகாலையில், இரண்டாம் கால யாக பூஜை, கலசங்கள் புறப்பாடு நடக்கிறது.காலை 8:30 மணிக்கு, கோவில் கோபுரம் மற்றும் அரசமர பத்ம கணபதிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. பின்னர், தச தரிசனம், அன்னதானம் வழங்குதல் நடக்கிறது. தொடர்ந்து, 12 நாட்கள் மண்டல பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை திம்மனுார் மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !