லவபுரீஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம்
கோயம்பேடு: கோயம்பேடு, லவபுரீஸ்வரர் கோவிலில், ஜூன் 4ம் தேதி, மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கோயம்பேடு, குறுங்காலீஸ்வரர் மற்றும் வைகுண்டவாசப் பெருமாள் திருக்கோவில்களின் உபகோவிலான, சவுந்திராம்பிகை உடனுறை லவபுரீஸ்வரர் கோவிலில், மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, ஜூன் 2ம் தேதி, காலை மற்றும் மாலை, 8:30 மணிக்கு மேல், கணபதி ஹோமத்துடன் பூஜைகள் துவங்குகின்றன. ஜூன் 4ம் தேதி, காலை 9:30 மணிக்கு, மஹா பூர்ணாஹூதி, தீபாராதனை, யாத்ராதான சங்கல்பம் நடைபெறும். தொடர்ந்து, அனைத்து கலசங்களும் புறப்பட்டு, அனைத்து கோபுரங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெறும். அதையடுத்து, சவுந்திராம்பிகை உடனாகிய லவபுரீஸ்வரர் மற்றும் அனைத்து பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெறும். மாலை 6:00 மணிக்கு, திருக்கல்யாணம், விசேஷ வாணவேடிக்கை மற்றும் கோசை நகரானின் சிவ பூதகணங்களுடன் மாட வீதியில் அருள் வழங்குதலுடன் நிகழ்ச்சி முடிவடையும்.