ஸ்ரீவி., கோயிலில் கும்பாபிஷேக பாதுகாப்பு பணியில் ஆயிரம் போலீசார்!
ADDED :3789 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசயனர் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடக்கும் நிலையில் பாதுகாப்பு பணியில் ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காலை 8 மணிமுதல் 9 மணிக்குள் நடைபெறும் கும்பாபிஷேகத்தை யொட்டி கோயில் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது. கடந்த 18 முதல் யாகசாலை பூஜை நடந்து வந்தது. கோயில் வளாகம் மற்றும் சுற்றுபுற மாடவீதிகள் மின்விளக்குகளால் ஜொலிக்கின்றன.நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஐந்து இடங்களில் 25 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது.நாங்குநேரி,திருப்பதி ஆகிய இடங்களை சேர்ந்த ஜீயர் சுவாமிகள் பங்கேற்கின்றனர். இதன் பாதுகாப்பு பணியில் ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.