உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னியம்மன் கோவில் குளம் சீரமைக்கப்படுமா?

கன்னியம்மன் கோவில் குளம் சீரமைக்கப்படுமா?

மணலி: கன்னியம்மன்பேட்டை கோவில் குளத்தை சீரமைக்க, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மணலி மண்டலம்,  கன்னியம்மன்பேட்டை பகுதி, 16வது வார்டில், கன்னியம்மன் கோவில் தெருவில் உள்ளது. அங்கு, பிரசித்தி பெற்ற கன்னியம்மன் கோவில் உள்ளது. அந்த கோயிலுக்கு சொந்தமான குளம் ஒன்று, தற்போது பராமரிப்பின்றி உள்ளது. குளம் முழுவதும், பாசி படிந்து  காணப்படுகிறது. குளம் அருகே குப்பை கொட்டப்படுவதால், பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்கள் குளத்தில் மிதக்கின்றன.  இதனால், குளத்தை சீரமைக்க நடவடிக்கை  எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !