உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தளிநாதர் கோயிலில் நாளை வைகாசி விசாக விழா துவக்கம்!

திருத்தளிநாதர் கோயிலில் நாளை வைகாசி விசாக விழா துவக்கம்!

திருப்புத்தூர் : திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில் வைகாசி விசாகப் பெருந்திருவிழா நாளை துவங்குகிறது. பத்து நாட்கள் நடைபெறும் இவ்விழா, நாளை காலை 6 மணியிலிருந்து 6.30 மணிக்குள் ரிஷப லக்கனத்தில் கொடியேற்றி காப்புக்கட்டி துவங்குகிறது. தினமும் இரவில் வாகனங்களில் சுவாமி - அம்பாள் திருவீதி உலா நடைபெறும். மே 26 காலை திருத்தளிநாதருக்கு மந்திர நீர் முழுக்காட்டு,மே 27 திருக்கல்யாணம், மே 31ல் தேரோட்டம்,ஜூன் 1ல் தெப்பக்குளமான சீதளியில் தீர்த்தம் வழங்குதலும், தெப்பமும் நடைபெறும். ஏற்பாட்டினை ஐந்து கோயில் தேவஸ்தானத்தினர் மற்றும் மண்டகபடிதாரர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !