கடல் நீராடல் சிறப்பு
ADDED :5247 days ago
புனித நீராடுவதற்கு அருவி, நதிகளை விட கடலே சிறந்தது என்கிறார்கள் சாஸ்திரம் அறிந்தவர்கள். அனைத்து புண்ணிய நதிகளும் கடலில்தான் கலக்கின்றன. எனவே, கடல் நீராடுவதால் அனைத்து புண்ணிய நதிகளிலும் குளித்த பலன் கிடைத்து விடுகிறது. கடல் தாய் தனக்குள் சேரும் எந்த பொருளையும் அப்படியே வைத்துக் கொள்வதில்லை. அவற்றை தன்னை சார்ந்து வாழும் திமிங்கலம், சுறா போன்ற உயிரினங்களுக்கு உணவாக கொடுத்துவிடுகிறாள். மேலும் தன்னுடன் எவ்வித அசுத்தத்தையும் வைத்துக் கொள்ளாமல், அலையடித்து ஒதுக்கி விடுவாள். இவ்வகையில் பரிசுத்தமான கடலே, புனித நீராடலுக்கு சிறந்தது எனக்கருதலாம்.