அவலூர்பேட்டையில் சிவனிரவு சிறப்பு பூஜை
ADDED :5278 days ago
அவலூர்பேட்டை : அவலூர்பேட்டை அகத்தீஸ்வரர் கோவிலில் சிவனிரவு சிறப்புபூஜை நடந்தது. சிவனடியார் திருக்கூட்டத்தின் 70ம் மாத சிவனிரவு சிறப்பு பூஜை அவலூர்பேட்டை அகத்தீஸ்வரர் கோவிலில் நடந்தது. முன்னதாக சித்தகிரி முருகன் கோவில் மலை அடிவாரத்திலிருந்து கந்தசாமி சிவாச்சாரியார் தலைமையில் சிவனடியார்கள் அகத்தீஸ்வரர் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். மாலை 5 மணிக்கு கொடி ஏற்றுதலும், இரவு ஏககால தீபாராதனையும் நடந்தது. இதில் முன்னாள் தலைவர் நடராஜன், பழனி, ராமலிங்கம், ராஜவேலாயுதம், விஜயகுமார், கோபால்சாமி, சின்ராஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.