தூய சகாய அன்னை ஆலயத்தில் ஆண்டுப்பெருவிழா!
ADDED :4123 days ago
காரைக்கால்: கோட்டுச்சேரி தூய சகாய அன்னை ஆலயத்தில் ஆண்டுப்பெருவிழாவை முன்னிட்டு மின் அலங்கார தேர்பவனி நடந்தது. காரைக்கால் கோட்டுச்சேரி தூய சகாய அன்னை ஆண்டுப்பெருவிழாயொட்டி கடந்த 15ம் தேதி முதல் 24ம் தேதி வரை ஆண்டுப்பெருவிழா நடைபெற்றது.கடந்த 15ம் தேதி சிறப்பு திருப்பலி தொடங்கி கொடியோற்றத்துடன் ஆண்டுபெருவிழா தொடங்கியது. 16ம் தேதி முதல் தினம் தேர்பவனி திருப்பலி,விண்ணேற்பு ஞாயிறு,தேர் பவனி நற்கருணை ஆசீர்,தேர்பவனி திருப்பலி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.நேற்று முன்தினம் கோட்டுச்சேரி பங்கு குரு ஜோசுவா தலைமையில் மின் அலங்கார தேர்பவனி,நற்கருணை ஆசீர் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான கி ருஸ்வமக்கள் கலந்து கொண்டனார்.