பிரளயநாதர் கோயிலில் அன்னைக்கு முதல் மரியாதை!
ADDED :3845 days ago
சோழவந்தான்: சோழவந்தானில் சத்யசாயி பாபா சேவா சமிதி பாலவிகாஸ் சார்பில் பெற்றோர்களுக்காக மாத்ரூபூஜை நடந்தது. பிரளயநாதர் சுவாமி சிவன் கோயிலில் நடந்த இந்நிகழ்ச்சியில் பாலவிகாஸ் குழந்தைகள் பஜனை பாடி பிரார்த்தனை செய்தனர். பின் அன்னையருக்கு முதல்மரியாதை தரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தாயின் பாதங்களை நீரால் சுத்தம் செய்து, பூஜித்து சிறப்பு வழிபாடு செய்தனர். தண்டபாணி, வரதராஜ் ஆகியோரின் பக்தி சொற்பொழிவு நடந்தது. லதா நன்றி கூறினார்.