செஞ்சி மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம்
ADDED :3989 days ago
செஞ்சி: செஞ்சி கிருஷ்ணாபுரம் மாரியம்மனுக்கு மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு கரன்சி நோட்டுக்களால் அலங்காரம் செய்தனர். செஞ்சி கிருஷ்ணாபுரம் மாரியம்மன், கிருஷ்ணகிரி கோட்டை பூவாத்தம்மன், ராஜகிரி கோட்டை செல்லியம்மனுக்கு மகா கோவில் மகா கும்பாபிஷேகம் கடந்த 1ம் தேதி நடந்தது. இதை முன்னிட்டு 48 நாள் மண்டலாபிஷேகம் நடந்து வருகிறது. இதில் பல்வேறு சிறப்பு அலங்காரங்களை செய்து வருகின்றனர். கடந்த 24ம் தேதி அரை மண்டலம் பூர்த்தியானதை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம் மற்றும் கரன்சி நோட்டுக்கள் மற்றும் சந்தனத்தினால் சிறப்பு அலங்காரம் செய்தனர். இரவு 7 மணிக்கு மகா தீபாராதனையும், பிரசாத விநியோகமும் நடந்தது. இதில் விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.