உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தட்டாஞ்சாவடி கணபதி சுவாமி குரு பூஜை விழா!

தட்டாஞ்சாவடி கணபதி சுவாமி குரு பூஜை விழா!

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி கணபதி சுவாமியின் 14ம் ஆண்டு குரு பூஜை நேற்று நடந்தது. தட்டாஞ்சாவடி குடிமைப்பொருள் வழங்கல் துறை அலு வலகம் எதிரில் உள்ள கணபதி சுவாமியின் 14வது ஆண்டு குரு பூஜை விழா, 24ம் தேதி மகா குரு தீபாரதனையுடன் துவங்கியது. மாலை 4:15  மணிக்கு முத்தையன் குழுவினரின் திருவாசக மேடை, அச்சுதானந்த சுவாமிகளின் கீர்த்தனைகள் நடந்தது. கலைஞர்களின் வாய்ப்பாட்டு, பரதநாட்டி யம் நிகழ்ச்சியும், அருணகிரிநாதர் ஆத்மானந்தம் என்ற தலைப்பில் அருள் உரை நடந்தது. இரவு 9:00 மணிக்கு திருவடி திருவமுத பஜனை நடந்தது.  நேற்று காலை 6:00 மணிக்கு பிரணவக் கொடியேற்றமும், 6:30 மணிக்கு திருபள்ளி எழுச்சி, திருவடிப்புகழ்ச்சி, அகவல், சிவபுராணம், பாராய ணமும், காலை 9:00 மணிக்கு யாகசாலை திருமுறை வேள்வி, பகல் 12:00 மணிக்கு மகா அபிஷேக ஆராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம்  வழங்கினர். பகல் 2:30 மணிக்கு துவங்கி மாலை வரை பல்வேறு அறிஞர்களின் ஆன்மீக சொற்பொழிவு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !