சோடசோப சாரத்தின் கால அளவு!
ADDED :3851 days ago
ஆதனமொடு ஆவாக னம்பனிரு மாத்திரைசொல்
ஐந்து மாத்திரை பாத்தியம்
ஆசமன மூன்றுமாத் திரையொன் றருக்கியம(து)
ஆறு மாத்திரை கந்தமாம்
சீதமலர் மாலைபனி ரண்டுமூ வைந்துபுகை
தீப மாத்திரை யாறதாம்
திகழ்கருப் பூரமீ ரெட்டுமாத் திரைபூதி
செய்வ லம்கண மேழதாம்
ஓதுமாத் திரைமூன்று விசிறிசா மரைபத்த
தோரைந் துகுடை மாத்திரை
உயராடி யேழ்சுளிகம் ஒருபத்து மூவைந்தில்
ஓங்கு பலிநை வேதனம்
சீதவிடை யூர்தியாய் இம்முறையின் முகமனது
செய்யவா கமம் உ ரைத்தாய்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.