காரமடை அரங்கநாதர் கோயிலில் ஜூன் 7ல் நன்னீராட்டு பெருவிழா!
கோவை: கோவை மாவட்டத்தில் திவ்ய தேச க்ஷேத்திரம் இல்லையே என்ற குறையைப் போக்கும் வண்ணம் அதற்கு இணையான கோயிலாக விளங்கும் தலம் காரமடை அரங்கநாத சுவாமி கோயில். நான்கு யுகங்களைக் கண்டவர். இப்பெருமாள். கொங்கு நாட்டின் தலைமை வைணவத்தலம். பலபெருமைகளை தன்னகத்தே கொண்டிருந்தாலும் கோயிலுக்கு அணி சேர்க்கும் இராஜகோபுரம் இல்லையே என்ற ஏக்கமும் குறையும் அனைத்து பக்தர்கள் நெஞ்சிலும் நிலைபெற்றிருந்தன. அரங்கனின் கருணையால் அனைவரையும் ஆனந்தத்தில் ஆழ்த்தும் விதமாக 11.12.2005 அன்று ஏழு நிலை ராஜகோபுரம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. மிகத் துல்லியமாக வடிவமைக்கப்பட்டு கலை நுணுக்கத்துடன் கைதேர்ந்த சிற்பிகள் மூலம் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளது. அழகுற வர்ணங்கள் பூசிய நிலையில் எழிலுடன் ஓங்கி உயர்ந்து கம்பீரமாக காட்சி தரும் இராஜகோபுரத்திற்கு வரும் ஜூன் 2015 7ம் தேதி ஞாயிற்றுக் கிழமையன்று காலை 9.15 மணிக்கு மேல் 9.45 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
வைணவ ஆச்சாரியார் இராமானுஜர் தரிசித்த பெருமைக்குரியது இத்தலம். இத்துடன் அனைத்து சன்னிதிகளிலும் திருப்பணி நிறைவுற்று, உள்சுற்று மண்டபமும் எழிலோடு அமைக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேக வைபவத்தில் கலந்துகொண்டு இறைவனைத் தரிசிப்பது கிடைத்தற்கரிய பெருகும் புண்ணியமும் கூட.
நிகழ்ச்சி நிரல்:
3-6-2015 -புதன் மாலை: 3.00 மணி- தீர்த்தக்குடங்கள், முளைப்பாரிகள் திருவீதி வலம் வருதல்
4-6-2015- வியாழன் காலை: 9.00 மணி- ஸ்ரீமஹா சுதர்ஸன ஹோமம்
மாலை: 6.00 மணி- ஆச்சார்யவரணம் அனுக்ஞை, வாஸ்து சாந்தி, மிருதசங்கிரகணம் அங்குரார்ப்பணம், யாகசாலை பிரவேசம், ரக்ஷாபந்தனம்
இரவு: 7.00 மணி- முதல்காலயாகம் ஆரம்பம்
இரவு: 8.30 மணி- பூர்ணாஹுதி, சாற்றுமுறை
5-6-2015- வெள்ளி
காலை: 8.00 மணி- சதுஸ்தான பூஜை
காலை: 9.00 மணி- இரண்டாம் கால யாகம் ஆரம்பம்
காலை: 11.00 மணி- பூர்ணாஹுதி, சாற்றுமுறை
மாலை: 6.00 மணி- சதுஸ்தான பூஜை
இரவு: 7.00 மணி- மூன்றாம் கால யாகம்
இரவு: 8.30 மணி- பூர்ணாஹுதி, சாற்றுமுறை
6-6-2015- சனி
காலை: 9.00 மணி- ஸ்ந-ன திருமஞ்சனம்
காலை: 10.00 மணி- நான்காம் கால யாகம்
காலை: 11.30 மணி- பூர்ணாஹுதி, சாற்றுமுறை
காலை: 11.45 மணி- அஷ்டபந்தன மருந்து சாற்றுதல்
மாலை: 5.30 மணி- விமான கோபுர கலசம் நிறுவுதல்
மாலை: 6.00 மணி- ஐந்தாம் கால யாகம்
இரவு: 7.00 மணி- பூர்ணாஹுதி சாற்றுமுறை
7-6-2015 -ஞாயிறு
அதிகாலை: 5.00 மணி- சதுஸ்தான பூஜை
காலை: 6.00 மணி- ஆறாம் கால யாகம்
காலை: 7.30 மணி- மஹாபூர்ணாஹுதி
காலை: 8.30 மணி- யாத்ராதானம், கும்பஉத்தாபனம் கடம் புறப்பாடு
காலை: 9.15 மணிக்குமேல் 9.45 மணிக்குள் மஹாகும்பாபிஷேகம் இராஜகோபுர கும்பாபிஷேகம்
மதியம்: 12.00 மணி- மஹா தீபாராதனை, தசதரிசனம் சாற்றுமுறை, மஹா ஆசீர்வாதம்
மாலை: 5.00 மணி- திருக்கல்யாண உற்சவம், திருவீதி உலா
வேள்விச்சாலை வழிபாட்டு நேரங்களில் வேத பாராயணம், ஆகமங்கள், திவ்யபிரபந்தங்கள் ஆகியன தொடரோதுதல் நடைபெறும்.
அன்னதானம்: 7-6-2015- ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காலை 8.00 மணிமுதல் அன்னதானம் நடைபெறும்.
தகவல்: வி.பி. ஆலாலசுந்தரம், கோவை.