உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் திருக்கல்யாணம்

திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் திருக்கல்யாணம்

திருப்புத்தூர் : திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில் வைகாசி விசாக விழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது. மே 23ல் காப்புக்கட்டி விழா துவங்கியது. தினமும் இரவு வாகனங்களில் சுவாமி - அம்பாள் திருவீதி உலா நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் திருத்தளிநாதருக்கு மந்திர நீர் முழுக்காட்டு நடந்தது. நேற்று காலை 9 மணிக்கு சுவாமி, அம்பாள் திருநாள் மண்டபம் எழுந்தருளினர். குன்றக்குடி பொன்னம்பல அடிகள் முன்னிலையில் காலை 10.45 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. மே 30 காலை 7 மணிக்கு நடராசப்பெருமான் திருவீதி உலா நடைபெறும் . மே 31ல் தேரோட்டம், ஜூன் 1ல் தெப்பக்குளமான சீதளியில் தீர்த்தம் வழங்குதல் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !