உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புனித வனத்து சின்னப்பர் ஆலய திருவிழாவில் பக்தர்கள் ஏலம்

புனித வனத்து சின்னப்பர் ஆலய திருவிழாவில் பக்தர்கள் ஏலம்

தொண்டி : தொண்டி அருகே உள்ள புனித வனத்து சின்னப்பர் ஆலய திருவிழாவில், நேர்த்திக் கடனுக்கான காணிக்கை தொயை செலுத்தாத பக்தர்கள், கொடி மரத்தில் கட்டி வைக்கப்பட்டு ஏலம் விடப்பட்டனர்.இத்திருவிழா கடந்த மே 19 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று சிறப்பு திருப்பலி நடந்தது. இந்த ஆலயத்தில் பல்வேறு நேர்த்தி கடன் செலுத்துவது சிறப்பம்சம் ஆகும். அதன்படி தங்கள் குறைகளை போக்க வேண்டிக் கொண்டவர்கள், வேண்டுதல் நிறைவேறியதும், இந்த ஆலயத்திற்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தும்போது, அதற்கான காணிக்கை தொகையை செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில், வேண்டிக்கொண்டவர்களை இந்த ஆலயத்தின் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் கட்டி வைத்து ஏலம் விடுவார்கள். காணிக்கை தொகையை செலுத்திய பிறகு அவிழ்த்து விடப்படுவார்கள். நேற்றும் இந்நிகழ்ச்சி நடந்தது. இரவில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அரியப்புவயல் புனித செபஸ்தியார் ஆலயத்திலும் திருவிழா நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று முன்தினம் இரவு நடந்தது. சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !