செல்வ முத்து மாரியம்மனுக்கு மண்டலாபிஷேக பூர்த்தி விழா
ADDED :3786 days ago
விழுப்புரம்: விழுப்புரம் செல்வமுத்து மாரியம்மன் கோவிலில் மண்டலாபிஷேகம் பூர்த்தியை யொட்டி பால்குட ஊர்வலம் சென்றனர். விழுப்புரம் வ.உ.சி., தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் முடிவடைந்து, 48வது நாள் மண்டலாபிஷேகம் பூர்த்தி விழா நடந்தது. இதையொட்டி காலை 8:00 மணிக்கு பெண் பக்தர்கள், திரு.வி.க., வீதி ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து பால்குடம் ஏந்தி, அம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. ஏற்பாடுகளை கவுன்சிலர் வேங்கடபதி தலைமையில் அறங்காவலர் நாகராஜ் மற்றும் விழா குழுவினர் பிரபு, ரகு, நரேஷ்குமார், குமார், வெங்கடேஷ் ஆகியோர் செய்தனர்.