மாஷபுரீஸ்வரர் கோவிலில் இன்று திருக்கல்யாணம்!
ADDED :3981 days ago
உளுந்தூர்பேட்டை: உளுந்தாண்டார்கோவில் மாஷபுரீஸ்வரர் கோவிலில் இன்று திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. உளுந்தூர்பேட்டை அடுத்த உளுந்தாண்டார்கோவில் ஸ்ரீலோகாம்பிகை வலமுறை மாஷபுரீஸ்வரர் கோவில் பிரமோற்சவம் விழா, கடந்த 23ம் தேதி துவங்கியது. மறுநாள் காலை பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம், தீபாராதனையும் நடந்தது. இன்று மாலை சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. இரவு கற்பக விருஷத்திலும், 30ம் தேதி இரவு குதிரை வாகனத்திலும் சுவாமி வீதியுலாவும், 31ம் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டமும் நடக்கிறது. வரும் 1ம் தேதி காலை ஞானதீர்த்த குளக்கரையில் சுவாமி தீர்த்தவாரி, இரவு சண்டிகேஸ்வரர் உற்சவம் நடக்கிறது.