அயன்கரிசல்குளம் காளியம்மன் கோயில் வைகாசி விழா!
ADDED :3784 days ago
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே அயன்கரிசல்குளம் காளியம்மன் கோயிலில் 5ம் ஆண்டு வைகாசி விழா மே 26ல் காப்பு கட்டி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மன் சிறப்பு கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். எட்டாம் நாளான நாளை பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும். விரதம் இருந்த பக்தர்கள் சித்தி விநாயகர் கோயிலில் இருந்து பால்குடம், தீச்சட்டி எடுப்பர். பின்னர் பூக்குழி இறங்கி அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்துவர். இரவு பஜனை, இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.