உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒச்சாண்டம்மன் பெருங்கும்பிடு விழாவிற்கு மீண்டும் தடை

ஒச்சாண்டம்மன் பெருங்கும்பிடு விழாவிற்கு மீண்டும் தடை

உசிலம்பட்டி : மதுரை மாவட்டம் பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயில் பெருங்கும்பிடு கிடாவெட்டு திருவிழாவிற்கு மீண்டும் தடைவிதிக்கப்பட்டது. இக்கோயில் திருவிழா ஐம்பது ஆண்டுகளுக்கு பின் ஜூன் 5,6,7ல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் யாருக்கு முதன்மை கொடுப்பது என்ற கருத்துவேறுபாட்டால் மே 26ல் தாசில்தார் கஜேந்திரன், டி.எஸ்.பி., சரவணக்குமார் இணைந்து திருவிழாவிற்கு தடை விதித்தனர்.இதை எதிர்த்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட, முதன்மை முக்கியத்துவம் தரப்படமாட்டாது உட்பட ஏழு விதிமுறைகளுடன் திருவிழா நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கீரிபட்டி, அய்யனார்குளத்தில் போராட்டம் நடக்கிறது. மே 27 முதல் பாப்பாபட்டி, கீரிபட்டி, அய்யனார்குளத்திற்கு அரசு பஸ்கள் இயக்கப்படாமல் உள்ளன.இதை பயன்படுத்தி சமூக விரோத செயல்கள் நடக்கலாம் எனக்கருதி, திருவிழாவை மீண்டும் ரத்து செய்வதாக அதிகாரிகள் நேற்று அறிவித்தனர். திருவிழா தொடர்புடைய கிராமங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்ட எஸ்.பி., விஜயேந்திரபிதரி உசிலம்பட்டியில் முகாமிட்டு பாதுகாப்பு பணிகளை கண்காணித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !