உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரி மகாலிங்கம் கோவில் செல்ல கட்டுப்பாடு:கலெக்டர்கள் கூட்டத்தில் முடிவு!

சதுரகிரி மகாலிங்கம் கோவில் செல்ல கட்டுப்பாடு:கலெக்டர்கள் கூட்டத்தில் முடிவு!

பேரையூர்: பேரையூர் தாலுகா சதுரகிரி மகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு பவுர்ணமி, அமாவாசையை ஒட்டி தலா மூன்று நாட்கள் என 6 நாட்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என டி.கல்லுப்பட்டியில் நடந்த மதுரை, விருதுநகர் மாவட்ட கலெக்டர்கள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. மதுரை கலெக்டர் சுப்பிரமணியன், விருதுநகர் கலெக்டர் ராஜாராமன் தலைமையில் இருமாவட்ட அதிகாரிகள் கூட்டம் டி.கல்லுப்பட்டியில் நேற்று நடந்தது. மதுரை எஸ்.பி., விஜேயேந்திர பிதரி முன்னிலை வகித்தார். இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் விவரம்: காட்டாற்று வெள்ளம் ஏற்படும் இடங்களான கருப்பசாமி கோவில், மாங்கணி ஓடை, எலும்போடை, பறிவெட்டு பாறை, சங்கிலி பாறை ஆகிய இடங்களில் காவல்துறை, தீயணைப்பு துறை, வனத்துறை ஆகியவை சார்பாக கூட்டாக பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்க வேண்டும். பக்தர்கள் காலை 6 மணியிலிருந்து மாலை 4 மணி வரை தான் மலைக்கு ஏறவோ அல்லது அங்கிருந்து இறங்கவோ அனுமதிக்க வேண்டும். மிக வயதானவர்களுக்கு இனிமேல் கோயிலுக்கு அனுமதி இல்லை பாதுகாப்பு கருதி பவுர்ணமி, அமாவாசையை ஒட்டி தலா மூன்று நாட்கள் என மொத்தம் 6 நாட்கள் மட்டுமே மலைக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் உட்பட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !