மூலநாதர் கோயிலில் தேர் சக்கரம் பொறுத்தும் பணி
ADDED :3844 days ago
பாகூர்: பாகூர் வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவிலுக்கு புதிய தேர் செய்யும் பணி நடக்கிறது, இந்த தேருக்கு, திருச்சி பெல் நிறுவனத்தில் தயாரித்த தலா 730 கிலோ எடையுள்ள நான்கு சக்கரங்களும், அச்சாணிகளும் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை தேரில் பொருத்த சிறப்பு பூஜை நேற்று நடந்தது. முன்னதாக, கலச ஸ்தாபன பூஜை, தீபாராதனை நடந்தது. தேரில் அச்சாணி மற்றும் சக்கரங்கள் பொருத்தும் பணி துவங்கியது. அமைச்சர் தியாகராஜன் உட்பட பலர் தரிசனம் செய்தனர்.