உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்

நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்

பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், பிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது. கோவிலில், காலை 9.00 மணிக்கு மூலாதார விநாயகர், பால விநாயகர், மூலநாதர், வேதாம்பிகையம்மன், முருகன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 5.00 மணிக்கு செல்வ நந்திபெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் மற்றும் அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !