உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூரிய பிரபையில் வரதராஜ பெருமாள்!

சூரிய பிரபையில் வரதராஜ பெருமாள்!

மீஞ்சூர்: மீஞ்சூர், வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தில், நேற்று, சூரிய பிரபை நிகழ்ச்சி நடந்தது. வடகாஞ்சி என்றழைக்கப்படும், மீஞ்சூர், பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவில், பிரம்மோற்சவம் நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை, 8:00 மணிக்கு, சூரிய பிரபை வாகனத்தில், பெருமாள் மாட வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்று பெருமானை வழிபட்டனர். இன்று, காலை 7:00 மணிக்கு, கருடசேவை நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !