ராஜகோபால சுவாமி அம்ச வாகனத்தில் உலா!
ADDED :3840 days ago
விருத்தாசலம்: வைகாசி விசாக பிரம்மோற்சவ இரண்டாம் நாளில் ராஜகோபால சுவாமி அம்ச வாகனத்தில் வீதியுலா நடந்தது. விருத்தாசலம் பெரிய õர் நகர் ருக்மணி, சத்யபாமா சமேத ராஜகோபால சுவாமி கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 30ம் தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன் துவ ங்கியது. இரண்டாம் நாள் உற்சவத்தையொட்டி, நேற்று முன்தினம் காலை வேணுகோபாலர் திருக்கோலத்தில் பல்லக்கில் உலாவும், பகல் 12:00 மணிக்கு திருமஞ்சனம், சேவா காலம், சாத்துமுறை நிகழ்ச்சி நடந்தன. இரவு 8:00 மணிக்கு ராஜகோபால சுவாமி, அம்ச வாகனத்தில் சரஸ்வதி அலங்காரத்தில் பூதாமூர், பூந்தோட்டம், சிதம்பரம் சாலை வழியாக வீதியுலா வந்து அருள்பாலித்தார்.