சேதுக்கரை ஸ்ரீனிவாசப்பெருமாள் கோயிலில் இடிந்து கிடக்கும் அர்த்த மண்டபம்!
கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம் சேதுக்கரையில் உள்ள ஸ்ரீனீவாசப் பெருமாள் கோயிலின் அர்த்த மண்டபம் இடிந்து விழுந்து விட்டது. இதை காணும் வெளியூர் பக்தர்கள் வேதனைப் படுகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வைணவத் திருக் கோயில்களில் ஒன்று திருப்புல்லாணி அருகே சேதுக்கரை கடற்கரைக்கு செல்லும் வழியில் உள்ள ஏகாந்த ஸ்ரீனிவாசப்பெருமாள் கோயில். ‘சின்னக்கோயில்’ என்றழைக்கப்படும் இக்÷ காயில் வெளியே தெரியப்படாமல் மரங்களாலும், புதர்களாலும் மறைக்கப்பட்டு, மூல ஸ்தான கோபுரக்கலசங்கள், கருவறை, முன்மண்டபம், அர்த்த மண்டபம், சிற்பத்துõண்கள் பராமரிப்பின்றி கிடக்கின்றன.
மழை, வெயிலால் பாதிக்கப்பட்டுள்ள இக்கோயில் குறித்து ‘தினமலர்’ நாளிதழில் கடந்த ஜன.,17 ல் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக ராமநாதபுரம் உழவாரப் பணிக் குழுவினர் கோயிலை சுத்தம் செய்தனர். இந்நிலையில், கடந்த வாரம் பெய்த கோடை மழையால், கோயின் கருவறை மற்றும் அர்த்த மண்டபத்தின் பின்பகுதி முழுமையாக இடிந்து விழுந்து சேதமடைந்து கிடக்கிறது. இதுகுறித்து திருக்கோஷ்டியூரை சேர்ந்த பட்டாச்சாரியார் ஒருவர் கூறுகையில், “இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதா தேவியை மீட்க, இங்கிருந்து தான் இலங்கைக்கு கடலில் பாலம் கட்டப்பட்டதாக ராமாயண காவியத்தில் கூறப்படுகிறது. சேதுக்கரை கடற்கரையில் தான் ராவணனின் தம்பி விபீஷணன் ராமபிரானிடம் சரணடைந்தார். அத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயிலின் தற்போதைய நிலையை காணும்÷ பாது, கண்ணீர் வருகிறது. இந்துசமய அறநிலையத்துறை, சமஸ்தான தேவஸ்தான நிர்வாகத்தினர் பூர்வாங்கப் பணிகளை துவங்கி, இக்கோயிலை புனரமைத்து, கும்பாபிஷேகம் நடத்த வழி காண வேண்டும்,” என்றார்.