அய்யனாரும், ஐயப்பனும் ஒரே தெய்வமா?
ADDED :3810 days ago
அய்யன் என்ற சொல்லுக்கு முதல்வர் என்று பொருள். வருந்தி வந்து வணங்குவோருக்கு அருள் தருவதில் முதல்வர் ஐயப்பன். ஐயப்பன், அய்யனார் கோவில்கள் மலை, காடுகளில் உள்ளன. இங்கும் கஷ்டப்பட்டு சென்று இறைவனைத் தேடுகிறார்களே... அந்த இயல்பை ஐயப்பன் விரும்புகிறார். கிராமத்து ஜனங்கள் ஐயப்பனை, அய்யனாராக குதிரை வாகனம் உடையவராக வணங்குகிறார்கள். இன்னும் சிலர் சாஸ்தா என்கிறார்கள். சாத்து என்றால் கூட்டமாக வந்து வணங்குதல் என்று பொருள். ஐயப்பன், அய்யனார் கோவில்களை கூட்டமாகச் சென்று வணங்குவதே இன்றுவரை வழக்கில் உள்ளது.