மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் தேரோட்டம் கோலாகலம்!
ADDED :3779 days ago
மதுரை: கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசித்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. கூடலழகர் கோயிலில் வைகாசி பெருந்திருவிழா 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் சுவாமி சிறப்பு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் காலை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். 4ம் தேதி, வியாழக்கிழமை தசாவதாரம் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.