உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சந்தானராம சுவாமி கோயிலில் உதய கருட சேவை!

சந்தானராம சுவாமி கோயிலில் உதய கருட சேவை!

திருவாரூர்: நீடாமங்கலம் சந்தானராமசுவாமிகோயிலில் வைகாசி விசாக உதய கருட சேவை உற்சவ (நம்மாழ்வார்திருநட்சத்திரம்) விழா அதிவிமரிசையாக நடை பெற்றது.இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தஞ்சையை ஆட்சிபுரிந்த மராட்டிய மன்னர் பிரதாபசிம்ம மகாராஜா  கி.பி.1 761ல் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில்  சந்தானராம சுவாமிக் கோயில் கட்டினார். மன்னர் வம்சத்தினருக்கு புத்திர பாக்கியம் அருளியதால் இக்கோயில் கட்டப் பட்டதாக வரலாறு. சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசு வாமிதீட் சதரால் பாடல் பெற்றது.  அதிகாலையில் புனித நீராடி சந்தானகோபால ஜெபம் செய்து சீதா,லெட் சுமண, ஹனுமன் சமேத சந்தானராமரை வழிபட்டால் புத்திர பாக்கியம் இல்லாத வர்கள் அப்பாக்கியத்தை அடைவார்கள் என்பது ஐதீகம்.  வரலாற்றுச்சிறப்புமிக்க இக்கோயிலில்  வைகாசிவிசாக உதய கருடசேவை உற்சவம் (நம்மாழ்வார் திரு நட்சத்திரம்)  அதிவிமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு வெள்ளி கருட வாகனத்தில் சந்தானராமர்  எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனைத்தொடர்ந்து சீதா,லெட்சுமண,ஹனுமன் சமேத சந்தானராமருக்கு சிறப்பு திருமஞ்ஜனம் மற்றும் சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமிதரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !