உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவேங்கடமுடையான் கோவிலில் கருட சேவை உற்சவம்!

திருவேங்கடமுடையான் கோவிலில் கருட சேவை உற்சவம்!

செஞ்சி:நல்லாண்பிள்ளை பெற்றாள் திருவேங்கடமுடையான் கோவிலில் கருட சேவை உற்சவம் நடந்தது.  செஞ்சி ஒன்றியம் நல்லாண்பிள்ளை  பெற்றாள் திருவேங்கடமுடையான் கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு கருட சேவை உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு காலை 6  மணிக்கு பூதேவி, ஸ்ரீதேவி சமேத திருவேங்கடமுடையானுக்கு சிறப்பு திருமஞ்சனமும், கருட கொடியேற்றமும் நடந்தது. தொடர்ந்து 7 மணிக்கு  பெரிய திருவடி எனும் கருட சேவை உற்சவம் துவங்கியது. இதில் கருட வாகனத்தில் திருவேங்கடமுடையான் எழுந்தருளி வீதி உலா நடந்தது.  ஊர்வலத்தை முன்னாள் ஊராட்சி தலைவர் திருப்பாவை நாதமுனி துவைக்கி வைத்தார். ஊராட்சி துணை தலை வர் அஞ்சுகம் நெடுஞ்செழியன்  முன்னிலை வகித்தார். திருவீதி உலாவின் போது பஜனை கோஷ்டிகள் நாராயணன் பாசுரங்களை பாடினர். இரவு பிரபந்த பஜனை நடந்தது. விழா  ஏற்பாடுகளை வைனவ மகா சபை மற்றும் ஆய்வு மைய நிர்வாகிகள்  மற்றும் கிராம பொது மக்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !