தேவி மாரியம்மன் கோவிலில் 1,008 பால் குடம் அபிஷேகம்!
ADDED :3779 days ago
மந்தாரக்குப்பம்: வைகாசி விசாகத்தையொட்டி, மந்தாரக்குப்பம் தேவி மாரியம்மன் கோவிலில் 1,008 குடம் நீர் மற்றும் பாலாபிஷேகம் நடந்தது. மந்தாரக்குப்பம் தேவி மாரியம்மன் கோவிலில், வைகாசி விசாகம் மற்றும் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தியொட்டி, நேற்று காலை 6:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, சுமங்கலி பெண்கள் 1,008 குடம் நீர், பால் குடம் சுமந்து வந்து, அம்மனுக்கு அபி÷ஷகம் செய்து வழிபட்டனர். பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம் பிரசாதம் வழங்கப்பட்டது.